தலைநகர் டெல்லியின் எல்லையில் விவசாயிகள், 3 விவசாய சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் அந்த போராட்டம் 300வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் இந்த நாடே துணை நிற்கும். நானும் இந்த நாட்டின் பக்கமே நிற்பேன். என ராகுல் காந்தி பதிவு செய்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், அதற்கு சரியான தீர்வு எட்டப்படவில்லை. இதனால் மழையிலும், வெயிலிலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
இதனை தொடர்ந்து விவசாயிகள் வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்ய மத்திய பாஜக அரசு மறுத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இது குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மோடி அரசு அவர்களின் நண்பர்களுக்காக மட்டுமே துணை நிற்கும். உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் இந்த நாடே துணை நிற்கும். நானும் இந்த நாட்டின் பக்கமே நிற்பேன் என்று பதிவிட்டு, IStandWithIndia என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு உள்ளார்.