பா.ம.க.வின் இடஒதுக்கீடு போராட்டம் தேர்தலுக்கான நாடகம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி கூறியதாவது:-
தேர்தல் நாடகம்
அ.தி.மு.க. ஆட்சி பெரியாரின் கொள்கைக்கு எதிரான ஆட்சி. இந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். வருகிற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஜனிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதுகுறித்து கருத்து தெரிவிக்கிறேன். பா.ம.க.வின் இட ஒதுக்கீடு போராட்டம் தேர்தலுக்கான நாடகம். சமூகநீதிக்காக பா.ஜ.க. எதுவும் செய்யவில்லை. சமூக நீதிக்கு எதிராக பா.ஜ.க. செயல்படுகிறது. தி.மு.க.வை குறை கூற பாஜகவுக்கு அருகதையில்லை.
வீழ்த்த முடியாது
மு.க.அழகிரி தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், அரசியலில் ஈடுபடலாம், அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
திராவிடத்தை யாரும் வீழ்த்த முடியாது, சுயமரியாதை உணர்வை யாரும் வீழ்த்திட முடியாது. இது பெரியார் மண். அ.தி.மு.க. சுயமரியாதையை இழந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.