மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தி.மு.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
இந்தியா முழுவதும் விவசாயிகள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். கொரோனா காலம் என்பதால் அடித்தட்டு ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள். மக்கள் உரிமைகள் முதல் மாநில உரிமைகள் வரை பட்டப்பகலில் பறிபோகின்றன.
உரிமைப் போராட்டம்
மனித உரிமை நாளை உண்மையில் கொண்டாடும் தகுதியை நாம் எப்போது பெறப் போகிறோம். மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.