அதிமுகவிற்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது – ஆர்.எஸ்.பாரதி

ஜெயலலிதா ஆட்சியில் 25 திட்டங்களுக்கு அம்மா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை எல்லாம் திமுக நீதிமன்றத்திற்கு சென்று தடுக்கவில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

உங்களுடன் ஸ்டாலின் (Ungaludan Stalin) திட்டத்தில் இருக்கும் ஸ்டாலின் பெயரை நீக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்றம் அரசியல் கட்சிகள் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை கிடையாது என்று கூறி சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற காலம் முதல் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டங்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது, நான்கு ஆண்டுகால ஆட்சி மீது எந்த குறையும் சொல்ல முடியாத அளவில் உள்ளது. அந்த வரவேற்பை தாங்கி கொள்ள முடியாமல் காரணத்தினால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திமுக தொடர்ந்து வெற்றி பெறுவதை தான் கொள்ள முடியாமல் காழ் புணர்ச்சி காரணமாக செயல்படுகிறார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அறிமுக செய்த உடன் புதிதாக எதே கண்டுபிடித்து புதிதாக ஞானம் வந்தது போல் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதா ஆட்சியில் 25 திட்டங்களுக்கு அம்மா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை எல்லாம் திமுக நீதிமன்றத்திற்கு சென்று தடுக்கவில்லை. ஜெயலலிதா பெயரில் உள்ள அம்மா உணவகத்தை திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என‌ திமுகவைச் சேர்ந்த தோழர் ஒருவர் விருகம்பாக்கத்தில் பலகையை அகற்றிய உடன் திமுக தலைவர் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்து அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.

தளபதி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக நடத்துகிறார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு பெயர் வைத்தவுடன் அவசர அவசரமாக நீதிமன்றம் சென்று வழக்கை தொடர்ந்தார். அண்ணா, பெரியார், அம்பேத்கர், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் பெயர்களில் திட்டங்கள் உள்ளது. அதனை எடுக்கும் வகையில் இந்த வழக்கு அமைந்துள்ளது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று உச்சநீதிமன்றம் சம்பட்டி அடி கொடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version