மு.க.ஸ்டாலின் முதல்வராக நினைப்பது ஒருபோதும் நடக்காது-அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மு.க.ஸ்டாலின் முதல்வராக நினைப்பது ஒருபோதும் நடக்காது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார்.

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று நிருபர்களுககு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தெப்பக்குளம்
மதுரை அருகே பனையூர் கால்வாயில் இருந்து தெப்பக்குளத்திற்கு நீர் வரும் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு தூய்மையான தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது தெப்பக்குளம் மூன்றாவது முறையாக நிரம்பி உள்ளது. மதுரையின் மெரினாவாக பொழுதுபோக்கு இடமாக தெப்பக்குளம் மாறியுள்ளது. திருமலை நாயக்கர் காலத்தில் பொறியாளர்கள் இல்லாத போதே மிகச்சிறப்பாக தெப்பக்குளம் கட்டப்பட்டு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதல்வராக முடியாது
மதுரையின் நூறு வார்டுகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட ஊருணிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. டி ஆர் பாலு அமைச்சராக இருந்தபோது சாலை பணிகளுக்காக பழமையான மரங்கள் வெட்டப்பட்டன. ஆறுவழிச்சாலை தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலையில், ஜெயலலிதா எதிர்க்கவில்லை. எதிர்கால திட்டம் என்பதால் ஜெயலலிதா அப்போது போராட்டம் நடத்தவில்லை. ஆனால், தற்போது அதுபோன்ற பொது நோக்கம் ஸ்டாலினுக்கு இல்லை. ஜீ பூம்பா, சூ மந்திரகாளி எனக்கூறுவது போல உடனடியாக முதல்வராக நினைக்கிறார் ஸ்டாலின். ஆனால், அது ஒரு போதும் நடக்காது. சைக்கிளில் போன ஆ.ராசா தற்போது வெளிநாட்டுக் காரில் செல்கிறார்.

ரஜினிக்கு போஸ்டர்
உலகெங்கும் தமிழன் பெயரைக் கெடுத்தவர் ராசா. எங்களைப் பற்றி பேச ஆ.ராசாவுக்கு தகுதி இல்லை. ஆனால், வேட்டி கட்டிய முதல்வர் கே.பழனிசாமி தமிழனின் பெருமையை நிரூபித்தவர். திஹார் வா வா என்பதால் ஆ.ராசா அ.தி.மு.க.வைப் பற்றி ஏதாவது சொல்லி விமர்ச்சிக்கிறார்.

ரஜினிகாந்திற்கு முதல்வர் என அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவது, அவர்களுடைய ரசிகர்களுக்கு விருப்பம். யோகிபாபுவுக்கு கூட அவர் ரசிகர்கள் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகின்றனர். அதனால் ரஜினி ரசிகர்கள் ஒட்டும் போஸ்டரால் தவறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version