உ.பியில் நடந்துள்ள கொடூரம் நெஞ்சைப் பதற வைப்பதாகவுள்ளது என விசிக தலைவர் ட்வீட் செய்துள்ளார்.
உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் விவசாயிகளின் கூட்டத்தில் புகுந்தது. இதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு தமிழகத்தில் இருந்து கமலஹாசன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உ.பியில் நடந்துள்ள கொடூரம் நெஞ்சைப் பதற வைக்கிறது. இந்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மோதச் செய்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்குப் பொறுப்பேற்று உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்யவேண்டும்.’ பதிவு செய்துள்ளார்.