வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என்பதில் அரசு உறுதி காட்ட வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்…

வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்குவதில்லை என்பதில் தமிழக அரசு உறுதிகாட்ட வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேல் யாத்திரை
பா.ஜ.க. நடத்தும் வேல் யாத்திரை வெறுப்பு அரசியலை வளர்க்கும் தீய நோக்கம் கொண்டது. வேல் யாத்திரைக்குத் தடைவிதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில், ‘வேல் யாத்திரைக்குத் தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட மாட்டாது’ என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


அதேசமயம், கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் இரண்டு, மூன்றாம் கட்ட அலைகளாகப் பரவும் அபாயம் என்பதை மட்டும் காரணமாகக் கூறியிருப்பது, வேல் யாத்திரையால் சமூக வாழ்வில் ஏற்படும் எதிர்விளைவின் பேராபத்தை அரசு கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

உறுதிகாட்ட வேண்டும்
இது தொடர்பான நடவடிக்கைகளைக் கவனித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சமூக அமைதியைப் பாதுகாக்க வேண்டும். சமூக அமைதியைப் பாதுகாக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அவசியம். வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற முடிவில் தமிழ்நாடு அரசு உறுதி காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளா்ர்.

Exit mobile version