முருகன் அருளால்தான் நான் உயிர் பிழைத்தேன் குஷ்பூ உருக்கம்!!!

தமிழ் நாடு முழுவதும் ப. ஜா. க சார்பாக வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது இதில் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பி. ஜா. க. வில் இணைந்த குஷ்பூவும் கலந்து கொண்டு வருகிறார்.

விபத்தில் சிக்கிய குஷ்பு…

இதனிடையே செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது இதில் அதிஷ்டவசமாக குஷ்பூ உயிர் தப்பினார்.

விபத்தில் தான் உயிர் தப்பியது பற்றி குஷ்பு உருக்கமான பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கடலூர் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்பட்டு சென்றபோது எனது கார் மீது கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக மோதியது.இந்த விபத்தில் எனது கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. முருகன் அருளால்தான் நான் உயிர் தப்பித்துள்ளேன். எனது கணவர் வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் என்னை காப்பாற்றி உள்ளது.

அந்த முருகனே என்னை வேல் யாத்திரைக்கு வரச் சொல்லி அழைத்து உள்ளது போலவே உணர்கிறேன். எனது பயண திட்டத்தில் எந்த மாற்றமும் நான் செய்யவில்லை.விபத்து நடந்த போதிலும் திட்டமிட்டபடி வேல் யாத்திரையில் நான் கலந்து கொள்வேன் என கூறினார்.

Exit mobile version