அதிமுக-வை மீட்டு சசிகலா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.
மதுரையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் வரும் 7-ம் தேதி சசிகலா தமிழகம் திரும்புவார் என்று கூறியிருக்கிறார். சசிகலா வந்த பிறகு அதிமுக-வை நிச்சயம் மீட்டெடுப்போம் என்றும் சசிகலா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் கூறியிருக்கிறார். உண்மையான தொண்டர்கள், விஸ்வாசத்தின் பக்கம் உள்ளவர்கள் சசிகலா பக்கம் நிற்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியை அமைக்க, அதிமுக-வை மீட்டெடுக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். சசிகலா வருகையை ஒட்டி முன்னதாகவே ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டு இருக்கிறது. கொரோனா சிகிச்சைக்குப் பிறகு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த சசிகலா வரும் 7-ம் தேதி வருவது உறுதியாகி இருக்கிறது. சசிகலா வந்த பிறகு தமிழக அரசியலில் நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.