கோட்சேவின் அஸ்தியை ஏன் கரைக்கவில்லை?

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் அறிமுகப்படுத்திய பல திட்டங்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளது என கோவை இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வெல்லட்டும் திராவிடம், ஒளிரட்டும் தமிழ்நாடு என்னும் தலைப்பில் ஊடகப்பிரிவு செயலாளர் ஜனா விஜய் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், மூத்த ஊடகவியலாளர் வேல் வீச்சு செந்தில்வேல், மாணவர் அணி ஒருங்கிணைப்பாளரும், வடக்கு மண்டல செயலாளருமான அதர்மம் மனோஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய, கோவை இராமகிருஷ்ணன் (தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர்) தமிழ்நாடு எல்லா மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து சேவை, இன்று பல மாநிலங்களில் அது அமல்படுத்தப்படுகிறது. காலை உணவு திட்டம் செயல்படுத்த கனடாவில் இருந்து வந்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டை இந்திய மாநிலங்களுடன் ஒப்பிட கூடாது. மாறாக ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட வேண்டும்.

கலைஞர் மருத்துவ மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்லும் போது ஒராண்டு கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவு போட்டார். இது தான் தமிழ்நாட்டில் மருத்துவ புரட்சிக்கு வித்திட்டது. வசதியான மக்களாக வாழ்பவர்கள் கூட இன்று மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெற்று பலன் அடைகின்றனர். பிரிட்டிஸ் ஆட்சியில் இருந்த நாடுகள் விடுதலை பெற்று இன்று முன்னோக்கி சென்று கொண்டுள்ளது. சுதந்திர தின உரையில் ராகுல் காந்தியை நினைத்து இரண்டு மணி நேரம் மோடி பேசினார். நீதி கட்சி தொடங்கிய காலத்தில் தான் முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

இந்தியாவில் சாதியால் வேற்றுமை உள்ளது. சாதி நம்மை பின்னோக்கி இழுத்து வருகிறது. வறுமையை ஒழிப்பது மட்டும் நமது வேலையாக இருந்திருந்தால் இன்னும் பல‌ மடங்கு முன்னோக்கி சென்று இருப்போம். ஆர்.எஸ்.எஸ்க்கு இது நூற்றாண்டு, காந்தியை கொன்ற கோட்சே சாம்பலை இது வரை அவர்கள் கரைக்கவில்லை. ஏன் என்றால் அவர்கள் நினைத்த பரந்த பாரதம் அமைக்க திட்டமிட்டு சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக இருக்க திட்டமிட்டார்கள். ஆனால் முடியவில்லை, அதனால் அப்படியே உள்ளது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அடிக்கடி தமிழகம் வருவதில் சூழ்ச்சிகள் இருக்கும் எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அமைப்பு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் திராவிட முன்னேற்ற கழகம் திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் சாதனைகள் மேல் சாதனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். அடுத்த ஆண்டு அல்ல வர கூடிய அனைத்து காலங்களும் திராவிட முன்னேற்ற கழகம் தான் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் அறிமுக படுத்திய திட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்தி வருகிறார்கள் என்று சொன்னால் அது தான் சாதனை. எல்லோருக்கும் எல்லாம் என்ற முதல்வரின் எண்ணத்தை நிறைவேற்ற சாதி தான் தடையாக உள்ளது எனப் பேசினார்.

Exit mobile version