பெய்ரூட் குண்டு வெடிப்பு: அம்மோனியம் நைட்ரேட் இத்தகைய வெடிப்புகளை எவ்வாறு உருவாக்குகிறது?

 பெய்ரூட்டில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த ஏற்பட்ட பேரழிவுகரமான வெடிப்பு 100 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதோடு குறைந்தது 4,000 பேரைக் காயப்படுத்தியது. அம்மோனியம் நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் இருந்தது.

 அம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன?


உரங்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அம்மோனியம் நைட்ரேட் எனப்படுவது,  அம்மோனியம் மற்றும் நைட்ரிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான உப்பாகும்.மேலும் இது வெடிக்கும் தன்மை கொண்டது.   அம்மோனியம் நைட்ரேட் அல்லது NH4-NO3 அதிகமாகும் போது, அதன் வெடிக்கும் திறன் அதிகமாகிறது.  துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைடரேட் அளவு 2,700 மெட்ரிக் டன் வரை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

ஏன் இவ்வளவு பெரிய பாதிப்பு


ஒரு பொருள் அதிகம் எரிய ஆக்சிஜன் தேவை என்பது அடிப்படை வேதியியல் தத்துவம். இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படக் காரணம் அம்மோனியம் நைட்ரேட் உடைய எதிர்மறை தண்மை தான். அம்மோனியம் நைட்ரேட் வெடிக்கும் பொது அதிக ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதன் காரணமாக வெடிப்பு இன்னும் பல மடங்கு ஊக்குவிக்கப் படுகிறது. இதனாலேயே ஒரு அனுகுண்டுடன் ஒப்பிடப்படும் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதற்கு முன் இது போன்ற விபத்துகள் நடந்துள்ளதா? 

அம்மோனியம் நைட்ரேட் மூலம் இதுபோன்ற பேரழிவு பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.  அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தொழில்துறை விபத்து 1947ல் டெக்சாஸ் நகர துறைமுகத்தில் நிகழ்ந்தது. கவனக்குறைவாக தூக்கி எறியப்பட்ட சிகரெட் ஒரு கப்பலில் இருந்த சுமார் 2,300 டன் (2,086,000 கிலோ) அம்மோனியம் நைட்ரேட்டை வெடிக்கவைத்தது. துறைமுகத்திற்கு அருகிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலும் தீ பரவி, ​​அந்த வெடிப்பு ஒரு சங்கிலித் தொடர்வினையை ஏற்படுத்தியது.  இந்த பேரழிவில் 581 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 16கிலோமீட்டர் வரை அதிர்வுகள் உணரப்பட்டது. விபத்து மட்டும் அல்லாமல்  தீவிரவாத செயல்களும் அம்மோனியம் நைடரேட் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளது. பாலி நகரில் 2002 ஆம் ஆண்டு இரவு விடுதியில் குண்டுவெடிப்பில் 204 பேர் கொல்லப்பட்டனர், 2011 ஆம் ஆண்டு ஒஸ்லோ குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்

Exit mobile version