
Light pollution எனப்படும் ஒலி மாசுபாடு காரணமாக நாம் தற்போது நட்சத்திரங்களை வெறும் கண்களால் பார்ப்பது கடினமாகிவிட்டது. தற்போது விஞ்ஞானிகள் அதற்கான தீர்வை கண்டுபிடித்துள்ளனர். உலகில் நட்சத்திரங்களை பார்ப்பதற்கு சிறந்த இடம் எது என்பது குறித்த தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளனர். அங்கிருந்து பார்த்தால் உலகில் வேறு எங்கிருந்து பார்ப்பதையும் விட மிகத் தெளிவாக நட்சத்திரங்கள் தெரியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அது தென்துருவத்தில் உள்ளது.
அந்த பகுதி Dome A, என்று அழைக்கப்படுகிறது. இது மத்திய அண்டார்டிகாவிற்கு அருகிலுள்ள ஒரு பீடபூமியில் அமைந்துள்ளது, இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2.5 மைல் (4 கிலோமீட்டர்) உயரத்தில் உள்ளது. Nature இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், பூமியின் வளிமண்டலத்திலிருந்து குறைந்தபட்ச குறுக்கீட்டோடு பிரபஞ்சத்தைப் பார்ப்பதற்கு Dome A எனும் இடம் சாதகமானதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
குறிப்பாக, Dome A க்கு மேலே உள்ள நட்சத்திரங்கள் உண்மையில் உலகெங்கிலும் உள்ளதை விட குறைவாக மின்னும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதற்கு காரணம் atmospheric turbulence எனப்படும் வளிமண்டல கொந்தளிப்பு என்ற நிகழ்வு. அடிப்படையில், மலைகள் அல்லது பள்ளத்தாக்குகள் போன்ற சீரற்ற நிலப்பரப்புகளில் காற்று வீசும்போது, அது வளிமண்டலத்தில் கொந்தளிப்பான நிலையை உருவாக்குகிறது. இது தொலைதூர நட்சத்திரங்களிலிருந்து பூமியை அடையும் ஒளியின் தோற்றத்தை தொந்தரவு செய்கிறது.
நட்சத்திரத்தின் ஒளி தரையைத் தாக்கும் நேரத்தில், அது எல்லா இடங்களிலும் பட்டு பிரதிபலித்து மங்கலாக காட்சியளிக்கும். இந்த இடம் மட்டும் தான் சிறந்ததா என்றால் இல்லை. ஹப்பிள் தொலைநோக்கி போன்றவை இன்னும் சிறந்தது தான். ஆனால் அதற்காக எல்லாராலும் செயற்கைகோள்களை ஏவும் அளவு வசதி இருக்காது . அத்தகைய ஆய்வாளர்களுக்கு தான் இந்த இடம் சரியாக இருக்கும். ஆனால் அவர்கள் அந்த குளிரை சமாளிக்க கண்டிப்பாக ஒரு ஹீட்டரை வைத்திருக்கும் அளவுக்காவது வசதியாக இருக்க வேண்டியது அவசியம்.