இன்றைய விஞ்ஞானி: Carolous Linnaeus

Linnaeus 1707ம் ஆண்டு மே 23ல் தெற்கு சுவிடன் ல் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை nills Linnaeus, தாய் Christina. nillsக்கு தாவரங்களின் மேல் இருந்த ஈடுபாட்டால் Linnaeusக்கும் அதில் ஒரு ஈர்ப்பை எற்படுத்தினார்.அதே போல் சிறு வயது முதலே லத்தீன் மொழி கற்றார். 10 வயதில் பள்ளியில் சேர்ந்த Linnaeus பிரகாசமான மாணவனாக திகழவில்லை என்றாலும் அறிவியலில் தனி கவனம் செலுத்தி வந்தார். மேல்நிலை படிப்பை முடித்த Linnaeus கல்லூரியில் படிக்க தகுதியில்லதவர் என அவருடைய ஆசிரியர்கள் கூறினர். தாவரங்களை ஆராய்வதை விட்டுவிட்டு greek, Hebrew அல்லது கணிதத்தில் கவனம் செலுத்தினால் முன்னேறலாம் எனக் கூறினர்.

இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தன் கடின முயற்சியால் 21 வயதில் Lund Universityல் சேர்ந்தார். Uppsala பல்கலைக்கழகம் தாவரவியல் துறையில் சிறந்து விளங்கியதால் ஒரே வருடத்தில் Linnaeus அங்கு சேரந்தார். அங்கு மருத்துவ பேராசிரியராக இருந்த Olof Rudbeck இவரது ஆராய்ச்சிகளை வியந்து பாராட்டினார். இதனால் 23 வயதில் தாவரவியல் துறையில் விரிவுரையாளராக Uppsala பல்கலைகழகத்தில் பணியாற்ற தொடங்கினார். 1730களில் தாவரவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த Linnaeus , பல்வேறு நாட்டு தாவரங்கள் பற்றி ஆராய்ந்தார். ஒரே தாவரத்திற்கு பல்வேறு வகையான பெயர்களை சூட்டியிருந்தது அவருக்கு மிகவும் குழப்பத்தை உண்டாக்கியது மட்டுமல்லாமல் நேரத்தை வீணாக்கும் செயலாகவும் இருந்தது. இதற்காக புதியமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் எனும் எண்ணம் இவருக்கு முதல்முறையாக அப்போது தோன்றியது.

1732ம் ஆண்டு may முதல் October மாதம் வரை சுமார் 2000 கிலோமீட்டர் Lapland எனும் இடத்தில் பயணம் மேற்கொண்டு, அந்த இடத்தின் பூர்வீக பறவை, விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் பற்றி பல குறிப்புகள் எடுத்தார். அப்பொழுது Linnaeus 100க்கும் மேற்பட்ட இதுவரை கண்டறியப்படாத தாவரங்களை கண்டறிந்தார். அவற்றை தொகுத்து ”Flora Lapponica” எனும் புத்தகத்தை வெளியிட்டார்.அந்த புத்தகத்தில் Linnaeus தாவரங்களுக்கு புதிய முறையிலான பெயர்களை சூட்டினார். ஒவ்வொரு தாவரத்திற்கும் வைக்கப்பட்ட பெயர்களை இரண்டு பாகங்களாக பிரித்தார்.இது Binomial Nomenculature எனப்பட்டது. 1735ல் தன் 28 ஆவது வயதில் doctorate பட்டம் பெறுவதற்காக Netherland ல் உள்ள Harderwijk பல்கலைக்கழகத்தில் சேர்ந்து Malaria நோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு எளிதாக Doctor பட்டமும் பெற்றார். அங்கு Frederick Gronorius எனும் டச்சு தாவரவியலாளாரை சந்திக்கும் வாய்ப்பு Linnaeuskக்கு கிடைத்தது. அவர் தாவரங்களுக்கு பெயரிடும் முறையை கண்டு ஆச்சரியமடைந்தார். பெயர்கள் மிக நீண்டதாக இல்லாமலும் ஏற்றுக்கொள்ளும் படி இருந்ததாலும் பெரிதும் கவரப்பட்டார். பின்னர் Frederick உம் அவரது நண்பர் issac Lawson எனும் ஸ்காட்லாந்தை சேர்ந்த மருத்துவரும் இணைந்து Linnaeusன் “systema naturae” எனும் புத்தகத்தை 1737ல் வெளியிட்டனர். முதல் பதிப்பில் வெறும் 12 பக்கங்களுடன் வெளியிடப்பட்ட இப்புத்தகம் 12 வது பதிப்பில் 2400 பக்கங்களுடன் பல்லாயிரக்கனக்கான பெயர்களை கொண்டிருந்தது. காலப்போக்கில் உலகம் முழுதும் இம்முறையே கடைப்பிடிக்கபட்டது.

1738ல் Sweden திரும்பிய Linnaeus, Stockholmல் Royal Swedish academy ல் பெரும்பங்காற்றினார். பின் அதன் முதல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1741 முதல் உப்சாலா பல்கலைக்கழகத்தில் தாவரவியல் ஆசிரியராகவும் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 1750ல் உப்சாலா பல்கலைக்கழகத்தின் இயக்குனர் ஆனார். 1753ல் தன் தலைசிறந்த படைப்பான Species Plantarum ஏனும் புத்தகத்தை இரு பாகமாக வெளியிட்டார். அதில் கிட்டத்தட்ட உலகம் முழுதும் அப்போது வரை கண்டுபிடிக்கபட்ட அனைத்து தாவரங்களை பற்றியும் விளக்கியிருந்தார். தாவாரவியல் துறை மட்டுமல்லாமல் அறிவியலின் பல்வேறு துறைகளில் பெரும் பங்காற்றியுள்ளார். Celcius ன் thermometerல் கொதி நிலை மற்றும் உறை நிலையை மாற்றியமைக்கும் திட்டத்தை கொண்டுவந்தார். வௌவால்கள் பறவையினம் அல்ல என்றும் அவை பாலூட்டி வகையை சார்ந்தது எனவும் கண்டறிந்தார்.

இவரது ஆராய்ச்சிகளை பின்பற்றியே சார்லஸ் டார்வின் போன்றவர்கள் தங்கள் ஆரய்ச்சியில் ஈடுபட்டனர். Index card எனும் ஒரு சிறந்த வரையறுக்கும் திட்டத்தை கொண்டுவந்தார். Swedenஅரசால் knight பட்டம் சூட்டப்பட்டு carlous von Linnaues எனஅழைக்கப்பட்டார். இவரின் மனைவி சாரா. இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள். srtokeக்கினால் பாதிக்கபட்ட Linnaues உப்சாலாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது தோட்டத்தில் காலமானார். அந்த தோட்டம் இப்பொழுதும் Linnaeus ன்சாதனைகளை பறைசாற்றும் அருங்காட்சியமாக உள்ளது.

Exit mobile version