செங்கோட்டையில் பயன்படுத்தப்பட்ட ட்ரொன் எதிர்ப்பு இயந்திரம்


74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தேச மக்களிடம் உரையாற்றிய போது அவரது பாதுகாப்புக்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.தற்போது பெருகி வரும் குட்டி விமானங்களான ட்ரோன் கலாச்சாரம் பாதுகாப்புக்கு சவால் விடும் வகையில் உள்ளது. யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சியை கண்காணிக்கலாம். வெடிகுண்டுகளை நிகழ்விடத்தில் விழச்செய்யலாம். இதை தவிர்ப்பதற்காக  செங்கோட்டைக்கு அருகே தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய ட்ரோன் எதிர்ப்பு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

டிஆர்டிஓ உருவாக்கிய இந்த ட்ரோன் எதிர்ப்பு இயந்திரம் குறித்த தகவல்கள்.

டிஆர்டிஓ உருவாக்கிய இந்த இயந்திரம் 3 கிலோமீட்டர் வரை ட்ரோன்களைக் கண்டறிந்து செயல்பட முடியாமல் ஜாம் செய்யும். லேசர் ஆயுதத்தைப் பயன்படுத்தி  2.5 கிலோமீட்டர் வரை உள்ள இலக்கை தாக்கி அழிக்கலாம்.

இதன் மூலம் ஒரு கணத்தில் ட்ரோன் அச்சுறுத்தல்களைக் அடையாளம் கண்டு அவற்றை நிறுத்தலாம்.

இதற்கு முன் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்புக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது, இதில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மோடி-டிரம்ப் ரோட்ஷோவிற்காக அகமதாபாத்தில் இந்த அமைப்பு பயன்படுத்தப்பட்டது.

Exit mobile version