SeithiAlai

மாட்டு சாணத்திலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்

மாட்டு சாணத்தில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் ராஜஸ்தானில் தொடங்கப்பட்டுள்ளது.

மாட்டு சாணத்தில் இருந்து வாகன எரிபொருள் தயாரிக்கும் திட்டம்- ராஜஸ்தானில்  தொடங்கியது | HPCL commenced its Cowdung to Compressed Biogas Project at  Sanchore Rajasthan

பெட்ரோல்,டீசலுக்கு மாற்றாக, காற்று மாசு இல்லாத பசுமை எரிபொருள் தயாரிப்பு திட்டங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக மாட்டு சாணத்தை கொண்டு உயிரி வாயு தயாரிக்கும் திட்டத்தை இந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனமான ஹெச்பிசிஎல், ராஜஸ்தான் மாநிலம் சஞ்சோரில் தொடங்கியுள்ளது. இதற்கான பூமி பூஜை, ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் பத்மேடா கிராமத்தில் நடைபெற்றது. கழிவிலிருந்து மின்சாரம் என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் முதல் திட்டம் இதுவாகும்.

உயிரி எரிவாயு தயாரிக்க இந்த நிலையத்தில் தினசரி 100 டன் மாட்டு சாணம் பயன்படுத்தப்படும். இதிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளை வாகனங்களுக்கு பயன்படுத்தலாம். இத்திட்டம் ஓராண்டு காலத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும்.

கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் படியும், மத்திய அரசு தொடங்கியுள்ள கோபர்தன் திட்டத்தின் கீழும், இந்த உயிரி வாயு தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Exit mobile version