கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி விலை ₹200 – ₹400

இந்தியாவில் 15-44 வயது வரையிலான பெண்களை மிக அதிக அளவில் தாக்கும் புற்றுநோய்களில்  கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்த புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் முதல் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி என்ற சிறப்பை பெறுகிறது. இதன் தொடக்கவிழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. விழாவில் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த தடுப்பூசி மலிவு விலையில் சாமானிய மக்களுக்கும் கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்யும் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பேசிய சீரம் நிறுவனத்தின் தலைமை செயலர் ஆதர் பூனாவாலா, இந்திய பெண்களுக்கு இந்த தடுப்பூசி அடுத்த சில மாதங்களில் ₹200 முதல் ₹400க்குள் கிடைக்கும் என்று தெரிவித்தார். இருப்பினும், அரசுடன் விவாதித்து இறுதி விலை நிர்ணயம் செய்யப்படும். மேலும், இந்தியாவில் 20 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய சீரம் நிறுவனம் தீர்மானித்துள்ளது என்று கூறினார்.

Exit mobile version