மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் புது உத்வேகம் கிடைத்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு அவசர காலத்தில் செலுத்துவதற்கு டிஜிசிஏ (இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்) அனுமதி வழங்கியுள்ளது. இது கொரோனாவிற்கு எதிரான நமது போராட்டத்திற்கு புதிய பலத்தை வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version