இனி தனியாருக்கும் அனுமதி ISRO தலைவர் சிவன் அறிவிப்பு !!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தனியார் நிறுவனங்கள் ராக்கெட்டுகளை இனி விண்ணில் செலுத்தலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன், பகிர்ந்துகொண்ட தகவலில் “ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தனியார் ராக்கெட்டுகளை இனிமேல் தனியார் நிறுவனங்கள் விண்ணில் செலுத்தலாம். இதற்காக தொழில்நுட்ப உதவிகள் இஸ்ரோ சார்பில் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அண்மையில் விண்வெளி துறையில் தனியார் துறையை அனுமதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த தகவலை சிவன் தெரிவித்துள்ளார்

Exit mobile version