உலக அளவில் ஆண்டுதோறும் பாம்புகள் கடித்து சராசரியாக 1 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இதில் அதிகபட்சமான மரணங்கள் இந்தியாவிலும், குறிப்பாக இந்திய கிராமப்புற பகுதிகளிலும் நிகழ்கிறது.
இந்நிலையில், வீடுகளை சுற்றிய பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டத்தை குறைக்க பின்வரும் வழிகளை பின்பற்றலாம். இதன்மூலம் பாம்புகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்கலாம்.
- சாணபாலுடன், பெருங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து தண்ணீரில் கரைத்து வீட்டை சுற்றி தெளித்தால் பூச்சி மற்றும் பாம்புகள் வீட்டைச்சுற்றி அண்டாது.
- வீட்டில் அடிக்கடி சாம்பிராணி புகைபோட்டு வைத்தாலும் பாம்பு தொல்லை குறையும்.
- வீட்டைச் சுற்றி உப்புக்கல்லை போட்டு விடுங்கள்.
- பிளீச்சிங் பவுடர் அல்லது 810 என்ற பூச்சிக்கொல்லி பவுடரை வீட்டை சுற்றி தெளிக்கலாம்.
- குருணைமருந்தை ஆற்றுமணலுடன் கலந்து வீட்டைச் சுற்றி போட்டால் பாம்புகள் நம்மை நெருங்காது.
- மண்ணெண்ணெயில் கொஞ்சம் உப்பு, தண்ணீரை கலந்து வீட்டை சுற்றி அடித்தால் பாம்பு நம் வீட்டுப்பக்கமே வராது.
- வீட்டில் சிறியநங்கை, பெரியநங்கை, நாகதாளி, ஆகாச கருடன், தர்ப்பப்பை புல் இவைகளை வளர்த்து வந்தால் அந்த செடிகளின் வாசனைக்கே பாம்பு நம்மை நெருங்காது.