சூரியனிடம் இருந்து தற்போது வருவதை விட சற்று அதிகம் சக்தி வாய்ந்த சூரியப் புயல் வந்தால் கூட உலகம் மொத்தமும் இருக்கும் மின்சாதனப் பொருட்கள் நாசமாகி விடும். இப்படி எச்சரித்துள்ளது சகோல்கோவோ இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.
சூரியனில் இருந்து அவ்வளவு பெரிய புயல் வந்தால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் சூரியனை குறித்த ஆராய்ச்சி இன்னும் துல்லியமாக இருக்கவேண்டும் எனவும், இதனால் சில முன்னேற்பாடுகளையாவது செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
துல்லியமாக தெரிந்துகொள்ள நாம் இன்னும் சூரியப்புயலை பற்றி நன்றாக ஆராய வேண்டும். சூரியப் புயலால் பூமியின் காந்தப்புலத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்தும் ஆராய வேண்டும்.
இதற்கு முன் 1859ம் ஆண்டு ஒரு சூரியப் புயல் தாக்கியதாகவும் அதனால் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் தந்தி சேவை முழுமையாக பாதித்தது என்று கூறியுள்ளனர். இப்போது ஒருவேளை அத்தகைய புயல் ஏற்பட்டால் நம் உலகமே முடங்கி விடும்.
கொரோனவை விட பெரிய பாதிப்பாக அது இருக்கும் எனவும், அப்படி ஏற்பட்டால் பூமி பழைய படி சரியாக பத்து ஆண்டுகளாவது ஆகும் எனவும் எச்சரித்துள்ளனர்.