செவ்வாய் கிரகத்தில் போருக்கு தயாராகும் சீனா அமெரிக்கா!!!

சீனாவும் தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான பந்தயத்தில் களமிறங்கியுள்ளது. சீனா கடந்த வாரம் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு ரோவரை அனுப்பியுள்ளது. இதேபோன்ற ஒரு பயணத்திட்டத்தை அமெரிக்காவும் கைவசம் வைத்துள்ளது. இன்று இன்னும் சிறிது நேரத்தில் அமெரிக்காவும் தன் செவ்வாய் கிரகத்துக்கான ரோவரை ராக்கெட் மூலம் ஏவவுள்ளது. அரசியல் சார்ந்த மோதல் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் தற்போது நடந்துகொண்டிருக்கும் வேளையில் விண்வெளி ஆய்விலும் இரு நாடுகளுக்கு இடையில் போட்டி துவங்கியுள்ளது.

தற்போது பூமியும் செவ்வாய் கிரகமும் ஒன்றுக்கு ஒன்று மிக அருகில் இருப்பதால் தற்போது ரோவரை அனுப்பினால் எளிதாகவும் விரைவாகவும் செவ்வாயை சென்றடையும். இதனாலேயே இந்த காலகட்டத்தை இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்கின்றன. சீனா தன் ரோவருக்கு Tianwen-1 என பெயரிட்டுள்ளனர். இதன் அர்த்தம் சொர்க்கத்திற்கான கேள்விகள் என்பதாகும். சீனாவின் மிகப் பெரிய விண்வெளி ராக்கெட்டான Long March 5ன் உதவியுடன் கடந்த 23ம் தேதி வானில் ஏவப்பட்டது தியான்வென் 1.

ஐந்து மாத பயணத்தில் 5.5கோடி கிலோமீட்டர் தொலைவை கடந்து 2020ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தை அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள மண்ணை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் இந்த போட்டியில் இருந்தாலும் அமெரிக்காவுக்கு முக்கிய போட்டியாக சீனாவே பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து கூறிய நாசா அதிகாரி சீனாவின் இந்த ரோவர் பெரிதாக எந்த தகவலையும் தரப் போவதில்லை. ஆனால் நாசா அனுப்பவுள்ள ரோவர் செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரிகள் எதாவது இருப்பதற்கான அல்லது இருந்ததற்கான சாத்தியக் கூறுகளை கண்டறியும் என தெரிவித்துள்ளனர். இந்த செவ்வாய் கிரக போட்டியில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version