ஓராண்டு பயணத்துக்கு பின் பூமிக்கு வரும் விண்கலம்

விண்வெளியிருந்து ஓராண்டு காலமாக பூமியை நோக்கி பயணித்து வரும் விண்கலம் அடுத்த வாரம் வந்து சேர்கிறது

மனித குளம் ஆண்டாண்டு காலமாக அறிய துடிக்கும் பல்வேறு ரகசியங்களையும் பல்வேறு கேள்விகளுக்கான முடிவுகளையும் அந்த அடுத்த வாரம் பூமியை வந்து சேரும் விண்கலமானது தாங்கி வருகின்றது. பூமியிலிருந்து சுமார் முப்பதுகோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறு கோலொன்றில் இருந்து மண் துகள்களை சுமந்து கொண்டு ஓராண்டாக பயணித்த விண்கலம் விரைவில் வந்து சேர உள்ளது. ஹயாபுசா என்ற அந்த விண்கலம் வரும் ஆறாம் தேதி தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில் தரை இறங்க உள்ளது.

2014 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த விண்கலம் நான்கு ஆண்டுகள் பயணித்து ரியுக்கு எனும் சிறு கோளில் தரை இறங்கியது. அதில் உள்ள பெரிய பள்ளத்தில் விண்கலத்தை தரை இறக்கி அதில் சிதறிய மண்ணை எடுத்ததாக கூறுகின்றனர் ஜப்பான் விஞ்ஞானிகள். சென்ற ஆண்டு தன் வேலையை முடித்து கொண்டு அங்கிருந்த புறப்பட்ட இந்த விண்கலம் தற்போது பூமிக்கு மிக அருகில் வந்துள்ளது. அது சுமந்து வரும் மண்ணை ஆராய்ச்சி செய்வதன் மூலம் சூரிய மண்டலத்தின் தோற்றம் மற்றும் உயிரங்களின் தோற்றம் குறித்து தெரியவரும் என ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் அந்த விண்கலம் அதனில் இருக்கும் சிறிய பெட்டியை பத்திரமாக தரை இருக்கவும் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் அது மிகவும் சவாலான காரியம் என கூறியுள்ளனர். விண்கலம் தரை இறங்குவதை கணிக்க ரேடார் போன்ற கருவிகள் கிழக்கு ஆஸ்திரேலியாவில் பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது விண்கலம் சுமந்து வரும் மண்ணிற்கு சொந்தமான கோலானது வடிவத்தில் மிக சிறியதாக உள்ளதால் இது மிகவும் பழமையாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இங்கிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணினால் மனித குளத்தின் பல கேள்விகளுக்கான பதிலை உள்ளடிக்கியது எனவும் கூறுகின்றனர்.

Exit mobile version