இந்தாண்டு இறுதியில் டைடல் பார்க்!

விருதுநகர் மாவட்டத்தில் அமையவுள்ள மினி டைடல் பூங்காவிற்கான வடிவமைப்பு மற்றும் ஆலோசர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் சேலம், தூத்துக்குடி, மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. திருப்பூர், வேலூர், காரைக்குடி, ராசிபுரம் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் விருதுநகர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதைச் செயல்படுத்தும் வகையில் டைடல் பூங்காவிற்கான வரைபடம் மற்றும் வடிவமைப்பு தயார் செய்வதற்கான ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. மேலும், திட்ட மேலாண்மை ஆலோசகர்களை தேர்வு செய்யவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. 3 மாதத்தில் வடிவமைப்பை தயார் செய்து, இந்தாண்டு இறுதிக்குள் கட்டுமான பணிகளை தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

Exit mobile version