இன்றைய விஞ்ஞானி : அலைன் ஆஸ்பெக்ட் (Alain Aspect)

Alain Aspect, நவீன யுகத்தைச் சேர்ந்த மிக முக்கியமான குவாண்டம் இயற்பியலாலர்களில் ஒருவர். 70 ஆண்டுகளாக, ஐன்ஸ்டீன் மற்றும் Niels Bohr-க்கு இடையேயான கருத்து மோதல்களை, முடிவுக்கு கொண்டுவந்தவர் இவரே, என்று சொல்லலாம். 73 வயதாகும் Aspect, அறிவியலின் மிகவும் குழப்பம் மற்றும் சவால் நிறைந்த துறையான, குவாண்டம் இயற்பியல் துறையில், முக்கியமான பங்காற்றியுள்ளார். ஐன்ஸ்டீன் மற்றும் Niels Bohr இடையேயான வாதம், அக்காலம் தொட்டு இன்று வரை மிகவும் பிரபலம். அறிவியலின் அடிப்படைத் தத்துவங்களையே மாற்றியமைக்கக்கூடிய வகையில் இருந்ததாலேயே, அவை முக்கியத்துவம் பெற்றன. அவர்களது வாதம் பிரபலமடைய மற்றொரு காரணம், அவர்கள் வாதம் செய்தது குவாண்டம் இயற்பியல் துறையில்.

ஒளியானது, சில நேரங்களில் துகளாகவும், சில நேரத்தில் அலையாகவும், செயல்படுவதாக அறிவித்தார் ஐன்ஸ்டின். அதற்கான காரணங்களையும் முன்வைத்தார். ஆனால், அதை மறைமுகமாக எதிர்த்தார், Niels Bohr. அதேப்போல, உறுதியின்மைக் கொள்கை என ஒன்று இல்லை என்று Max Born, Heisenberg போன்றவர்கள் கூறிய நிலையில், அதைக் கடுமையாக எதிர்த்தார், ஐன்ஸ்டீன்.

Quantum Entanglement எனப்படும் இருநிலை இருப்புக் கொள்கை, கோட்பாட்டு ரீதியாகவே சாத்தியம் என்றும், செயல்பாட்டு ரீதியாக ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என ஐன்ஸ்டீன் கூறினார். ஆனால் வழக்கம் போல Bohr இதனை மறுத்தார். Alain Aspect-ன் ஆய்வே, இதைச் சார்ந்து தான் இருந்தது. Quantum Entanglement எனப்படும், இருநிலை இருப்பை செயல்படுத்திக் காண்பித்தார். இதன் மூலம், ஐன்ஸ்டீன் மற்றும் Bohr-க்கு இடையேயான வாதத்துக்கு, முடிவு கொண்டுவந்தார் என்றே சொல்லலாம்.

1947-ஆம் வருடம் ஜூன் 15-ஆம் தேதி France-ல் பிறந்தார் Alains Aspect. புகழ்பெற்ற ENS கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார். 1980-ல் தன் முதல் ஆய்வுக்கட்டுறையை முடித்தார். பின்னர், லேசர் மூலம் அனுக்களை குளிர்விப்பதற்கான ஆய்வில் ஈடுபட்டார். French Academy of Sciences, French academy of Technology போன்றவற்றில் உறுப்பினராக உள்ளார்.

2005-ஆம் ஆண்டில், National Scientific Research Centre-ல் தங்கப்பதக்கம் பெற்றார். இயற்பியலுக்கான Wolf Prize எனப்படும் பரிசை, 2010-ஆம் ஆண்டில் பெற்றார். Niels Bohr International Gold Medal, UNESCO Niels Bohr Medal என, Niels Bohr-ன் பெயரால் வழங்கப்பட்ட இரண்டு விருதுகளையும் வென்றுள்ளார். குவாண்டம் துறையில் இவர் ஆற்றிய ஆய்வுகளுக்காக, Balzan Prize எனப்படும் விருதையும் வென்றார்.

2015-ஆம் ஆண்டு, ராயல் சொஸைட்டியின் வெளிநாட்டு உறுப்பினராகவும் (Foreign Member of the Royal Society (ForMemRS)) தேர்ந்தெடுக்கப்பட்டார், Alain Aspect. தற்போது, Ecole Polytechnic கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். மேலும் பல கல்லூரிகளுக்கும் கவுரவ பேராசிரியராக சென்று கொண்டே, தன் ஆய்வுகளையும் தொடர்ந்து வருகிறார்.

Exit mobile version