
1803-ஆம் ஆண்டு 29-ஆம் தேதி ஆஸ்திரியாவில் உள்ள Salsburg நகரில் பிறந்தார் Christian Andreas Doppler. கற்சிற்பம் செதுக்கும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவரது உடல் திறன் மோசமாக இருந்ததால் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அவரது பள்ளிப்படிப்பை Salsburg நகரிலேயே முடித்த டாப்லர், அதன் பிறகு Vienna Polytechnic கல்லூரியில் சேர்ந்தார். அங்கு கணிதத்தில் சிறந்து விளங்கிய டாப்லர், 1825-ல் கல்லூரி படிப்பை முடித்தார்.
அதன் பிறகு Salsburg திரும்பிய டாப்லர், University of Vienna-வில் கணிதம் மற்றும் விண்வெளி துறையை தேர்ந்தெடுத்து உயர்படிப்பை கற்றார். 1829-ல் படிப்பை முடித்ததும், அங்கிருந்த பல்கலைகழகப் பேராசிரியரான Burg என்பவரிடம் உதவியாளராக சேர்ந்தார். அவரிடம் பணிபுரிந்த நான்காண்டுகளில், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருந்தார் டாப்லர். நிரந்தர வருமானம் தேவையாய் இருந்ததால், ஆசிரியர் பணிக்காக பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் விண்ணப்பித்திருந்தார். அப்போதிருந்த சட்டதிட்டங்கள் காரணமாக, ஆசிரியர் பணி அவருக்கு எளிதாக கிடைத்து விடவில்லை.
அப்போது கிட்டதட்ட 18 மாதங்கள் பஞ்சாலையில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார் டாப்லர். பின்னர் நம்பிக்கையிழந்து தன் உடைமகளை விற்று, அமெரிக்கா சென்றுவிட திட்டமிட்டார். அந்த நேரத்தில் Prague-வில் உள்ள ஒரு தொழில்நுட்பப் பள்ளியில் இருந்து அழைக்கப்பட்டார். ஆனால், அங்கும் அவருக்கு மனநிறைவு ஏற்படாமல் போனது. காரணம் அங்கு அவர் கணிதம் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தது தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு.
அப்போது அவருக்கு அங்கிருந்த கல்லூரியில் இருந்து பகுதிநேர ஆசிரியராக பணிபுரிய அழைப்பு வந்தது. புதிதாக திருமணம் ஆகியிருந்த டாப்லருக்கு, இது மிகவும் உதவிகரமாக இருந்தது. 1837-ஆம் ஆண்டு Polytechnic கல்லூரியில் Geometry & Elementary Mathematics துறையின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் டாப்லர். பனிச்சுமை காரணமாக உடல்நிலை மோசமான டாப்லர், தன் வேலையை விட்டுவிட தீர்மானித்திருந்தார். Bolzano எனும் அவரது நண்பர் அவருக்கு உறுதுணையாக பல உதவிகளைச் செய்தார். பின்னர், Academy of Mines & Forests in Banska Stiavnica-வில் அவருக்கு பேராசிரியரக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது.
1842-ஆம் ஆண்டு டாப்லர் தன் ஆய்வுக்கட்டுரையில், உலகப்புகழ் வாய்ந்த டாப்லர் விளைவை முதன் முதலாக முன்மொழிந்தார். ஒலி அலைகளை ஒரு இடத்தை நோக்கி பாயச்செய்யும் போது, குறிப்பிட்ட நபரை நோக்கி அந்த ஒலி அலை வரும்பொழுது Pitch எனப்படும் ஒலியின் சுருதி அதிகமாகவும், அந்த நபரை விட்டு விலகுகின்ற பொழுது சுருதி குறைவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது ஒலியின் மூலம் ஒரு இடத்தை அணுகும்பொழுது அதன் அதிர்வெண் அதிகமாகவும், விலகிச்செல்ல செல்ல அதிர்வெண் குறைவதையும் உறுதிப்படுத்தினார். இதே விளைவை பின்னர் ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த Hippolyte Fizean என்பவர் மின்காந்த அலைகளில் கண்டறிந்தார். இந்த டாப்லர் விளைவு, பல எண்ணிலடங்கா பயன்பாடுகளை கொண்டது.
Ambulance-ல் பொருத்தப்பட்டுள்ள Siren-கள் இந்த விளைவின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. வானியல் துறையில் நட்சத்திரங்களின் வேகத்தையும், அவை நம்மை நோக்கி பயணிக்கிறதா அல்லது விலகிப் பயணிக்கிறதா என்பதை கண்டறியலாம். நட்சத்திரங்களின் தொலைவும், அவற்றின் வெப்பநிலையும், டாப்லர் விளைவின் மூலமாகவே கணக்கிடப்படுகின்றது.
Radar, Sonar போன்றவை பெருமளவில் நம்பியிருப்பது இந்த விளைவை நம்பியேயாகும். டாப்லர் விளைவை பயன்படுத்தி, ஒருவரின் உடலில் உள்ள இரத்த ஓட்டத்தின் வேகத்தையும், இதய வால்வுகளின் செயல்பாடுகள், இயல்பற்ற தொடர்புகள் போன்றவற்றையும் கண்டறியலாம்.
Royal Bohemian Society-ன் செயலாலராகவும் செயல்பட்ட டாப்லர், பின்னர் வியன்னாவில் உள்ள Imperial Academy of Science-ல் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். 1850-ல் வியன்னா பல்கலைகழகத்தின் இயற்பியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார் டாப்லர். 1950-களில் Tuberclosis நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டார் டாப்லர். Mathild Strum என்பவரை திருமனம் செய்துகொண்ட டாப்லருக்கு, மொத்தம் 5 குழந்தைகள். மார்ச் 17, 1853-ஆம் ஆண்டு இத்தாலியின் வெனிஸ் நகரில் காலமானார் டாப்லர்.