மார்ச்சில் மலர இருக்கும் தேனி மக்களின் கனவான மதுரை- போடிநாயக்கனுர் அகல ரயில் பாதை

தேனி மண்ணின் மைந்தர் ரவீந்திர குமார் எம் பி உறுதி

தேனி மாவட்டத்தில் கேரள எல்லையில் உள்ள ஏலக்காய் மற்றும் தேயிலைப் பொருட்கள் விளைவிக்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் தேனி , போடிநாயக்கனுர் சுற்றுவட்டார மக்களின் போக்குவரத்து வசதிக்காகவும் 1928 ஆண்டு போடி – மதுரை இடையே தொடங்கப்பட்ட ரயில் போக்குவரத்து பாதை அகல பாதையாக மாற்றப்படும் எனவும் அதற்காக 150 கோடி ஒதுக்கப்படும் எனவும் 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு வரை எந்த முயற்சிகளும் எடுக்கப்படாத நிலையில், விவசாயிகளும் பொது மக்களும் பெரிதும் ஏமாற்றமடைந்திருந்த நிலையில், இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நடந்து வரும், அதிமுக மக்களாட்சியின் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் எம் பி அவர்களின் முயற்சியால் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்த பணிகள் தற்போது மின்னல் வேகத்தில் துரிதப்படுத்த பட்டிருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் தெரிவித்து கொள்கிறோம்.

“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்” என்னும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க நம் தேனி நாயகன், தங்கத் தாரகை, இந்தியாவின் இரும்பு மனுஷி அம்மா ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தலைவன் ஓ. பி. எஸ் அவர்களின் வழி வந்து கொண்டிருக்கும் மண்ணின் மைந்தன் ஓ. பி .ஆர் தேனி மக்களின் பத்து ஆண்டு கால கனவை நிறைவேற்றுவதே தனது லட்சியம் எனவும் மார்ச் மாத்தில் ரயில் ஓட்டம் உறுதியாக தொடங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Exit mobile version