ஸ்பெயினின் மலாகா நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவும் இத்தாலியும் மோதின. ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை 2-1 என்ற கேம் கணக்கில் இத்தாலி வென்றது.
இதன் மூலம் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு டேவிஸ் கோப்பை தொடரின் அரையிறுதியில் இத்தாலி கால்பதித்து உள்ளது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் கனடாவும் ஜெர்மனியும் மோதின. ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் ஜெர்மனியை 2-1 என்ற கேம் கணக்கில் கனடா வீழ்த்தியது.
இதை தொடர்ந்து நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் கனடா, இத்தாலியுடன் மோத உள்ளது.