லண்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ன் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 அணி ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியானது முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா வெற்றிபெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஒரு கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா நேற்றைய 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது இருந்தது. தொடர்ந்து இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிவை நோக்கி நகர்ந்தது.இறுதியில், இந்திய அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது.
சாம்பியன் ஷிப்பை வென்றது ஆஸ்திரேலியா
-
By mukesh

Related Content
வலுவான கொள்கைவாதி பெரியார்
By
daniel
March 12, 2025
முதலமைச்சர் திட்டவட்டம்
By
daniel
March 11, 2025
கருப்பு உடை போராட்டம்!
By
daniel
March 11, 2025
அஜித் கட் - அவுட்டிற்கு 'பீர'பிஷேகம்
By
daniel
February 6, 2025
ஆளுநர் மௌனமாக இருக்கலாமா?
By
daniel
February 6, 2025
வெறுப்பரசியல் செய்கிறது பாஜக - சு.வெங்கடேசன் எம்.பி
By
daniel
February 5, 2025