2022 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட்ட FIFA!!!

உலகத்தில் அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு விளையாட்டு என்றால் அனைவரிடமும் மாற்றுக்கருத்து இல்லாமல் வரும் ஒரே பதில் அது ஒன்று தான், ஆம் அந்த விளையாட்டு கால்பந்துதான்.நம் நாட்டில் கிரிக்கெட்டை எப்படி ரசிக்கிறோமோ அதை விட பத்து மடங்கு ரசிகர்கள் கால்பந்து விளையாட்டை ரசிக்கின்றனர். அதிலும் கால்பந்து உலககோப்பை என்றால் போதும் ,மேற்கத்திய நாடுகளின் பாமர மக்கள் முதல் அதிபர் வரை சிறு பிள்ளை போல் விசில் அடித்து ரசிக்கும் அளவுக்கு கால்பந்தின் வெறித்தனமான ரசிகர்களாக உள்ளனர்.

ரஷ்யாவில் நடந்த கடந்த உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்த உலக கோப்பை 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது, அதற்கான அட்டவணையை பிபா வெளியிட்டுள்ளது. தகுதி சுற்றில் வெற்றி பெரும் அணியை பொறுத்து எந்த நாடு எந்த நாட்டுக்கு எதிராக விளையாடும் என்ற முழு அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிஅடுத்த கால்பந்து உலகக்கோப்பை போட்டி 2022ம் ஆண்டு நவம்பர் 21ம் நாள் தொடங்குகிறது என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு FIFA அறிவித்துள்ளது.

2022 யில் நவம்பர் மாதம் 21ம் தேதியன்று தொடக்க விழா நடைபெறும் என்றும், இறுதி ஆட்டம் டிசம்பர் 18ம் தேதி நடைபெறும் என்றும் FIFA அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இதனால் கால்பந்து பிரியர்கள் உற்சாகம் அடைத்துள்ளனர்.

Exit mobile version