இந்திய பேட்மிட்டன் முகாமுக்குள் கண்ணாமூச்சி காட்டிய கொரோனா!!

ஹைதராபாத்தில் உள்ள கோபி சேர்ந்த அகாடமியில் இந்திய அணியின் முன்னணி  பேட்மிட்டன்  வீரர்-வீராங்கனைகள் காண பயிற்சி நடந்து வருகிறது  இதில் உலக சாம்பியன் பி.வி.சிந்து, சாய் பிரனீத் உள்ளிட்ட பல முன்னணி வீரர், வீராங்கனைகள் தனித்தனியாக வந்து பயிற்சியாளர்கள் உதவியுடன்  பயிற்சி மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில், இந்திய விளையாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி இந்த முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், இந்திய இரட்டையர் பிரிவு வீராங்கனை என்.சிக்கி ரெட்டிக்கும், அவரது உடல்தகுதி நிபுணர் சி.கிரனுக்கும் அறிகுறி எதுவும் தென்படாத நிலையில்    கொரோனா தோற்று  இருப்பதாக உறுதி செய்யப்பட்டது அடுத்து அவர்களை தனிமைப்படுத்தி  கொள்ள அறிவுறுத்தப்பட்டது

பின்பு கிருமி நாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்வதற்காக அக்காடமி தற்காலிகமாக மூடப்பட்டது  நான்கு நாட்கள்  முகாம் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில்  வெள்ளிக்கிழமை தனியார் மருத்துவமனையில்  இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொண்ட  சிக்கி ரெட்டி மற்றும் கிரண்  ஆகியோருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது எனவே வழக்கம் போல் வரும் திங்கட்கிழமையில் இருந்து அவர்கள் பயிற்சி முகாமில் இணைவார்கள்.

Exit mobile version