பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.
கொல்கத்தா :
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரங் கங்குலிக்கு திடீரென நெஞ்சு வலியுடன் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகளில் ஒன்று ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. அவரது உடல் நிலை குறித்து டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Read more – அம்மா வங்கிக்கணக்கில் இருந்து 11 லட்சம் அபேஸ் : 6 வயது சிறுவன் கேமில் வந்த பரிதாபம்
இந்த நிலையில், கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று உட்லேண்ட்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. வீட்டில் வைத்தும் கங்குலியின் உடல் நிலை தினசரி கண்காணிக்கப்படும் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.