டுவெண்ட்டி 20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த பிராவோ!!!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 36 வயதான டுவெய்ன் பிராவோ. IPL இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

தற்போது வெஸ்ட் இண்டீசின் கரிபியன் தீவுகளில் நடந்து வரும் கரிபியன் பிரிமீயர் லீக் (CPL) 20 ஓவர் கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக டுவெய்ன் பிராவோ விளையாடி வருகிறார்.

இந்நிலையில், போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி செயிண்ட் லூக்கா சோகஸ் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் டிரின்பாகோ வீரர் டுவெய்ன் பிராவோ வீசிய பந்தில் லூக்கா அணியின் கார்ன்வெல் போல்ட் ஆகி வெளியேறினார்.

அவரது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பிராவோ பெற்றார். மேலும் கரிபியன் பிரிமீயர் லீக்கில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் பெருமையையும் பிராவோ தட்டிச்சென்றார்.

ஏற்கனவே டி20-யில் 400 விக்கெட்டுகளை கடந்த ஒரே வீரர் என்ற பெருமையில் இருந்த பிராவோ, தற்போது 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு சேர்ந்துள்ளது.

Exit mobile version