ஐ.பி.எல்லே நான் தான் டா.. ஐ.பி.எல்க்கே நான் தான் டா…சாதனை ஏணியில் ஏறும் தோனி..

ஐ.பி.எல் போட்டிகளில் 200-வது ஆட்டத்தில் விளையாடி சாதனை படைத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி.

ஐ.பி.எல்லின் 37-வது லீக் ஆட்டம் இன்று அபுதாபியின் சையக் சையத் மைதானத்தில் சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இந்த போட்டியில் விளையாடுவதன்மூலம் 200-வது ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமை தோனிக்கு கிடைக்கவுள்ளது.

மேலும் சி.எஸ்.கே அணிக்காக தோனி 150 கேட்ச்களை பிடித்த சாதனையை படைக்க ஒரு கேட்ச் மட்டுமே தோனிக்கு பாக்கியுள்ளது.மேலும் 4000 ஐபிஎல் ரன்களை பூர்த்தி செய்ய அவருக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.இந்த 2 சாதனைகளையும் இந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி முறியடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Exit mobile version