இன்னைக்கு மேட்ச் வேற லெவல் பங்கு..சென்னை ஊதுனாங்க கொல்கத்தாக்கு சங்கு…

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல் ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Rana cricket player: Watch Nitish Rana smashes three consecutive sixes off  Karn Sharma in KKR vs CSK match | The SportsRush

துபாய்:

முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் நிதிஷ் ராணா சிறப்பாக விளையாடி அரை சதம் கடக்க,மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ஜொலிக்கவில்லை.20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து இருந்தது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 87 ரன்கள் எடுத்து இருந்தார்.

173 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.தொடக்க வீரராக இறங்கிய ருது ராஜ் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்து அசத்த,மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தது.தொடர்ந்து விளையாடி வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்த்த ருதுராஜ் 72 ரன்களில் வெளியேறினார்.கடைசி ஓவர் கடைசி பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்து சென்னை அணியை வெற்றி பெற செய்தார்.சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருது ருது ராஜ்க்கு வழங்கப்பட்டது.

Exit mobile version