பயப்படுகிறாரா கேப்டன் கோலி!..ரோகித் சர்மாவுக்கு எதிராக சதி?.. என்ன தான் நடக்கிறது தேர்வுக் குழுவில்..

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அப்போது, ஒருநாள், டீட்வெண்டி மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டித் தொடர்கள் நடைபெற உள்ளது.

அதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதாமாக இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா, 3 வித போட்டிகளுக்கான எந்த அணியிலும் சேர்க்கப்படவில்லை. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக ரோகித் சர்மா தொடரில் சேர்க்கப்படவில்லை எனவும், அவரது உடல்தகுதி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என பிசிசிஐ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரோகித் சர்மா காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளில் விளையாடாமல் உள்ளார். அவர் காயத்திலிருந்து மீண்டு வருவதாகவும், அடுத்த சில நாட்களில் அவர் மீண்டும் களமிறங்குவார் எனவும், மும்பை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரோகித் சர்மா காயத்தில் இருந்து மீண்டுவரும் நிலையில், அடுத்த மாதம் 27ம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியா தொடருக்கு அவர் தேர்ந்து எடுக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காயம் காரணமாக ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கபப்டுவதாக கூறப்பட்டாலும், அவர் குணமடைந்து வரும் நிலையில் குறைந்தபட்சம் டிசம்பர் மாதம் தொடங்க உள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான தொடரிலாவது அவருக்கு வாய்ப்பளிகக் வேண்டாமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதே சமயம், காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளிலும் பங்கேற்காத பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால், ஆஸ்திரேலியா தொடரில் மூன்று விதமான போட்டிகளுக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார். இது ரசிகர்களிடையே பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே, இந்திய அணியில் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும், ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக சில வீரர்களும் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது, ஐசிசி தொடரில் கோலி தரப்பில் பங்கேற்ற எந்த ஒரு தொடரிலும் இந்திய அணி இதுவரை கோப்பையை கைப்பற்றவில்லை.

ஐபிஎல் தொடரிலும், 2013ம் ஆண்டில் ஒரே நேரத்தில் கேப்டன் பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 4 முறை கோப்பையை கைப்பற்றிவிட்ட நிலையில், கோலி தலைமையிலான பெங்களூர் அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. இதனால், ஏற்கனவே இந்திய அணிக்கு ஒருநாள் மற்றும் டீட்வெண்டி தொடருக்கான துணை கேப்டனாக உள்ள ரோகித் சர்மா, டீட்வெண்டி தொடருக்கு முழுநேர கேப்டனாக நியமிக்கபப்ட வாய்ப்பு உள்ளதாக சில தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில் காயத்தை காரணம் காட்டி ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பது, திட்டமிட்டே ரோகித் சர்மா அணியில் இருந்து விலக்கப்படுகிறாரா என்ற சந்தேகத்தை எழுப்ப, ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அதே கேள்வியை எழுப்பி வருகின்றனர். காயத்தால் அவதிப்பட்டு வரும் மயங்க் அகர்வாலின் நிலை என்னவென்றே தெரியாத நிலையில், அவர் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால், காயத்தில் இருந்து மீண்டுள்ள ரோகித் சர்மாவிற்கு அணியில் இடமில்லையா என விவாதங்களும் எழுந்துள்ளன.

ஆஸ்திரேலியா தொடருக்கான அணி அறிவிக்கபப்ட்ட சிறிது நேரத்திலேயே, மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தில் ரோகித் சர்மா தீவிரமாக பயிற்சி எடுக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது, அதில், அனைத்து விதமான ஷாட்களையும் ரோகித் சர்மா எந்தவித சிரமமுமின்றி அநாவசியாக ஆடியுள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், காயத்தில் இருப்பவர் எப்படி வலைப்பயிற்சியில் ஈடுபட முடியும். அப்படி எனில் அவருக்கு ஏற்படுள்ள காயம் என்ன என்பதை ரசிகர்கள் அனைவரும் அறிய வேண்டும் என கூறியுள்ளார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் கேப்டன் கோலிக்கு நெருக்கமான கேஎல் ராகுல் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூர் அணியைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், மும்பை அணியில் சிறப்பாக செயல்ப்ட்டு வரும் சூர்யாகுமார் யாதவிற்கோ, இஷான் கிஷானிற்கோ வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, கோலி தனது கேப்டன் பதவியை ரோகித் சர்மாவிடம் இழந்து விடக் கூடாது என்பதற்காகவே ரோகித் சர்மாவை அணியில் இருந்து தவிர்க்கிறார் என்ற குற்றச்சாட்டும் பல தரப்பில் இருந்து எழத்தொடங்கியுள்ளது.

Exit mobile version