மேலும் ஒரு சி.எஸ்.கே வீரருக்கு கொரோனா !!

சி.எஸ்.கே-வில், ஏற்கெனவே 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் ஒரு சி.எஸ்.கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டி, வரும் செப்டம்பா் மாதம் 19-ஆம் தேதி முதல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இதற்காக துபாய் சென்றுள்ள வீரர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று வெளியான முடிவில், சி.எஸ்.கே பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று மேலும் ஒரு சி.எஸ்.கே வீரர், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மேலும் சில நாட்களுக்கு வீரர்கள் தங்களை தனிமைப்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, துபாய் சென்றுள்ள சென்னை அணியில், இதுவரை மொத்தமாக 14 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கெனவே, சுரேஷ் ரெய்னாவும், தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகி உள்ளதால், கலக்கத்தில் இருந்த சி்.எஸ்.கே ரசிகர்களுக்கு, அடுத்த அதிர்ச்சி தரும் செய்தியாக, இந்த தகவல் அமைந்துள்ளது.

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சி.எஸ்.கே வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது, சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version