கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவுக்கு கொரோனா

கால்பந்து சாம்பியனும் போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனுமான ரொனால்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
Ronaldo

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், உலகின் சிறந்த வீரர் விருதை 5 முறை வென்றவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சமீபத்தில் நேஷன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் விளையாடி வந்தார்.

இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரான்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில், 35 வயதான ரொனால்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ரொனால்டோ தன்னைத்தானே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். ரொனால்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவித்து இருக்கும் போர்ச்சுக்கல் கால்பந்து சங்கம், இன்று நடைபெறும் ஸ்வீடனுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார் என்று அறிவித்துள்ளது.

யுவென்டஸ் கிளப் (இத்தாலி) அணிக்காகவும் விளையாடி வரும் ரொனால்டோ, அடுத்து வரும் அந்த அணியின் லீக் போட்டிகளிலும் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.இது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version