சிஎஸ்கே ஹோட்டலுக்குள் நுழைந்த கொரோனா!!

ஐ.பி.எல் 2020 க்காக சி.எஸ்.கே துபாயை அடைந்த சில நாட்களுக்குப் பிறகு, அணியின் பல உறுப்பினர்கள் கோவிட் -19 டெஸ்ட் எடுத்ததில் கொரோனாபாசிட்டிவ் என்று காண்பிப்பதாக  பிரபல பத்திரிகையில்செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஐபிஎல் 2020 துவங்குவதற்கு முன்னர் இந்த அறிக்கை  தற்போது ஒரு பெரிய அதிர்ச்சியாக வந்துள்ளது, இந்த போட்டியை ஏற்கனவே இந்தியாவில் அதிகரித்து வரும்  தொற்று நோய்காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) க்கு மாற்றப்பட்டது.

 தற்போது  ஐபிஎல் நடக்கும் இடத்திலும் ஏராளமான கொரோனா தொற்றுநோய் பதிவாகியுள்ளதால் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலைமையும் தற்போது சிக்கலாகவே உள்ளது. கோவிட் -19   தொற்று ஏற்படும் எண்ணிக்கையில்   யுஏஇ நாடு சமீபத்தில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இருப்பினும், சி.எஸ்.கே உறுப்பினர்களின்  தொற்றுநோய்பாதித்தவர்களின்பெயர்கள், இன்னும்  அதிகாரப்பூர்வ  ஆதாரங்களுடன்வெளியிடப்படவில்லை

எனினும்சி.எஸ்.கே  இன்றுவெள்ளிக்கிழமை தங்கள் பயிற்சியைத்  தொடங்க இருந்த சிஎஸ்ஐ அதை தற்போது தள்ளி வைத்திருக்கிறது,  மேலும், இப்போது தனிமைப்படுத்தலுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது.

கொரோனாபாசிட்டிவ்சோதிக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலில்  கிரிக்கெட் வீரர்கள் வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் (supportstaff) ஆகியோரும் அடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.10 பேருக்கும் மேல் பாதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், விவோ ஐபிஎல் ஸ்பான்சர்களாக விலகிய பின்னர், ட்ரீம் 11 இந்த ஒப்பந்தத்தை ரூ .220 கோடிக்கு நான்கு மாதங்களுக்கு வாங்கியது. செப்டம்பர் 10  முதல் போட்டிதொடங்கும்  எனவும் ஐபிஎல் இறுதிப் போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.  என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன ஆயினும், அட்டவணை குறித்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.மும்பை இந்தியன்ஸ்  அணி நடப்பு சாம்பியன் ஆக இந்த போட்டியில் களம் இறங்குகிறது.

Exit mobile version