சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஒப்பந்தம் முறித்துக் கொள்ள முடிவு : தயார் நிலையில் சி.எஸ்.கே

ஐ.பி.எல் 13 வது தொடரில் இருந்து சொந்த காரணத்திற்காக ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் விலகிய நிலையில், இருவரின் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள சி.எஸ்.கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
RAINA,HARBHAJAN SINGH

ஐ.பி.எல் 13 வது கிரிக்கெட் தொடர் U.A.E நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக ரெய்னா அணியுடன் சென்று வீரர்கள் கோரன்டைனில் இருந்தபோது, சொந்த காரணத்திற்காக ரெய்னா இந்தியா திரும்பினார். அதற்கு பிறகு ஒட்டுமொத்த தொடரிலும் இருந்து விலகினார். ஹர்பஜன் சிங் U.A.E செல்லாமல் ஏதோ ஒரு காரணத்திற்காக விலகுவதாக தெரிவித்தார்.

டோனிக்கும், சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரெய்னா விலகியதாக கூறப்பட்டது.சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ரெய்னா குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இருவரையும் 2018 ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ரெய்னாவுக்கு 11 கோடி ரூபாய் சம்பளமும், ஹர்பஜன் சிங்கிற்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஐ.பி.எல் விதிப்படி இந்த சீசனுடன் 3 வருட ஒப்பந்தம் முடிவடைகிறது.இந்த நிலையில் இருவரின் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் முறித்து கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்த அணியின் சி.இ.ஓ-விடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் இந்த செய்தியை மறுக்கவில்லை. சென்னை அணி இருவரையும் வெளியேற்றினால், ஐ.பி.எல் ஏலத்தில் மற்ற அணிகள் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது.

ஆனால் அடுத்த வருடத்திற்கான ஏலம் நடைபெறுமா? என்பது கேள்வி தான்.அடுத்த ஐ.பி.எல் தொடருக்கு இன்னும் 6 மாத கால இடைவெளி உள்ள நிலையில் இந்த நடைமுறை பின்பற்றபட்டால் அடுத்த ஐ.பி.எல் தொடரில் இவர்கள் பங்கேற்பது சந்தேகம்தான்.

Exit mobile version