நாளை தனி விமானம் மூலம் கிளம்பும் சிஎஸ்கே ; ஆனால் இவர் இப்போ போகலையா!!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020ல் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியினர், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நாளை புறப்படும் நிலையில் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நாளை அதில் இடம்பெற மாட்டார் என கூறப்படுகிறது.

தற்போது சென்னையில் ஐபிஎல் 2020 க்கான பயிற்சி முகாமில் சில தனிப்பட்ட சிக்கல்கள் காரணமாக ஹர்பஜன் சிங்  கலந்து கொள்ளவில்லை . 

இதுதொடர்பாக, பிரபல பத்திரிக்கையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, ஹர்பஜன் சிங்கின் தாயார் உடல்நிலை சரியில்லை எனவும், இதன் விளைவாக இரண்டு வாரங்களுக்குப் பிறகே சிஸ்கே அணியின் பயிற்சி முகாமில் அவர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஓரு வார காலத்திற்கான சிஸ்கே அணியின் பயிற்சி முகாம் சென்னையில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய நிலையில், ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அதில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version