இது ஐ.பி.எல் கேம் நாலு… யாரு ஜெயிச்சாங்கன்னு நான் சொல்றத கொஞ்சம் கேளு..
என் பேரு சென்னை..ஐ.பி.எல்க்கே நான் தான் அன்னைன்னு டாஸ் ஜெயிச்சு பால் எடுக்க.. ராஜஸ்தானுக்கு பேட் கொடுக்க… உள்ளே ஓடி வந்தாரு ஜெய்சுவால் சிங்க குட்டி… உன் ஆட்டம் இங்க பலிக்காது தங்ககட்டினு சகார் தலைல தட்டி அனுப்பி விட… கோவமா வந்தாரு சஞ்சு.. ஆறு மாசம் நான் ஆடல ஆட்டம்.. என் அடிக்கு சென்னை பயந்து ஓட போகுது ஓட்டம் .. அதனால என் கூட போகுது கூட்டம்னு… கிடைக்குற பால்லாம் சஞ்சு தூக்கி அடிக்க… அடிச்ச அடில பந்தே வலிக்குதுன்னு வலில துடிக்க… பால் போட்ட பௌலர்லாம் கடுப்புல நாக்க கடிக்க… ஏறிச்சு ரன்.. ராஜஸ்தான் ரசிகர்களுக்கு துடிச்சுச்சு கண்ணு.. இங்க இருக்கறவன் பேர் ஸ்மித்.. சென்னை ரசிகர்கள் ஓரமா நின்னு கத்துனு அவரும் அவர் பங்குக்கு வெடிக்க… தாரு மாறு தக்காளி சோறு… எவன் வந்தாலும் மோதி பாரு… ரெண்டு பேரும் சேர்ந்து சி.ஸ்.கே பௌலர்கல தொரத்தி தொரத்தி அடிக்க.. விரட்டி விரட்டி நொறுக்க..பத்து ஓவர்ல தொட்டுச்சு 100.. அடிச்சது யாருனு சஞ்சு சாம்சன் பாருன்னு சட்டை காலரோட சேர்த்து பேட் ஆஹ் தூக்க…
நீ தூக்குனது போதும் தூரமா போன்னு.. சஞ்சு வ பஞ்சு ஆக்கி லுங்கிடி நெகி ஊதி தள்ள… அடுத்து வந்தாரு கில்லர் மில்லர்… அடுத்த பால்லே அவுட் ஆனது பார்க்க வெரி திரில்லர்.. உத்தப்பா நீ வந்தது ரொம்ப தப்பப்பா சாவ்லா அவர் விக்கெட் ஆஹ் கழட்டி விட.. வந்தாரே வந்தாரே திவாடியா… இப்படி அவுட் ஆகிட்டு போறியே போண்டியா…. அட ஸ்மித் நீ இப்ப தான் 50 ஏ எம்பி எம்பி அடிக்குறியா… ஓடி ஓடி வந்தாரே பராக்… தோனி கொடுத்து அனுப்புனரே உனக்கு சர்லாக்… தட்டி தட்டி அடிச்ச ஸ்மித் 69 ல அவுட் ஆகிட்டு போக… 19 வது ஓவர்ல வந்தாரு ஆர்ச்சர்… ஒரேடியா சென்னை அணிய கொண்டு போன்னாறு ஸ்டர்ச்சர்… லுங்கிடி லாஸ்ட் ஓவர் ஓடி வந்து வீச… ஆர்ச்சர் அத தூக்கி தூக்கி வீச… சென்னை வீரர் கண்ணெல்லாம் மேல பந்து போறத பார்த்து கூச… தோனி பயத்துல ஓடி வந்து ஒழுங்கா போட சொல்லி பேச.. கடைசியா ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்கோர் 216 க்கு ஏழு … இனி சென்னை எப்படி பேட்டிங் பண்ணாகனு என்கிட்ட கேளு
சென்னைக்கு தேவை நிறைய ரன்னு.. இவங்க அடிச்சு ஜெயிக்க வைப்பாங்க வின்ன்னு.. தோனி முரளி விஜயையும், வாட்சனையும் இறக்கி விட… அடிச்சு ஆடுங்கனு சொன்ன… ராஜஸ்தான் பௌலர்களுக்கு ரெண்டு பேரும் அடங்கி ஆட… எட்டு ஓவர் முடிச்சுருச்சு. சி.ஸ்.கே ரசிகர்கள் ரன் எங்கன்னு தேட… தூங்கி கொண்டிருந்த வாட்சன்.. துடிச்சு போய் நான் கிரிக்கெட் ஓட காட் சன் … முட்டி போட்டு பந்த அடிக்க… பேட் ல பட்டு வெடிக்க… சென்னை ரன் கொஞ்சம் கொஞ்சமாய் செழிக்க… எதிர் முனையில் முரளி விஜய் நேரத்தை ஆடாம கழிக்க… அடுத்தடுத்து திவாடியா மந்திரிச்சு போட்ட பால் பலிக்க… வாட்சன் கால் பட்டு ஸ்டம்ப் ஆஹ் கிழிக்க.. ராஜஸ்தான் வீர்கள் முகத்தில் 1000 வால்ட்டு பல்ப் ஜொலிக்க.. சென்னை ஸ்கோர் 56.. என் நண்பன் எவ்வழியோ நானும் அவ்வழியேனு முரளி விஜயும் வாட்சன் கூட வாக்கிங் போக… பின்னாடி டு பிளிசி கூட சாம் கரண் ஜாகிங் வர.. சாம் ஒரு இளங்கன்று… பயமன்று… திவாடியா பாலில் அப்பளத்தை விட்டு விட்டு பொறிக்க… திவாடியா பயத்தில் நெஞ்சில் அரிக்க… பின்னாடி இருந்த சஞ்சு ,சாம் விக்கெட்டை சரிக்க.. அடுத்த ருது விக்கெட்டையும் அதே மாதிரி கொரிக்க.. திவாடியா சந்தோஷத்தில் பறக்க… சென்னை பாவமாய் நாக்கு தள்ளி நான்கு விக்கெட்டை 77 ரன்னுக்கு இழந்தது.. அடுத்து வந்தவரு பேரு ஜாதவ்… அரக்கப்பரக்க மூணு போர் அடிக்க… அப்புறம் மெல்ல அடிக்குற மாதிரி நடிக்க.. இவர் நாடகம் முற்றும்னு டாம் கரன் முடுச்சி வைக்க.. ஐ வந்துட்டாரு வந்துட்டாரு தோனி.. இனி சென்னை ரன் ஏறிடும் ஏணின்னு.. எல்லோரும் தோனிய பார்க்க… டு பிளிசி அந்த சைடு ராஜஸ்தான் பௌலர்கள போட்டு தாக்க.. இத பார்த்து சென்னை ரசிகர்களுக்கு ஆனந்தத்தில் கண் வேர்க்க… தோனியும் அவர் கூட கை கோர்க்க.. டு பிளிசி அடிச்சாரு இப்ப அம்பது அதனால இப்ப அவர் பேட் எம்புது.. டு பிலிஸியும் கடைசி நேரத்துல காதலி மாதிரி தோனியை கழட்டி விட… இப்ப ஆறு பாலுக்கு 38 தேவை.. இனிமே தோனி அடிச்சாலும் தேவைப்படாது அவரோட சேவை…. இருந்தாலும் நான் அடிப்பேன்னு ஆக்ரோசமா டாம் கரன் பாலில் ஹாட்ரிக் சிக்ஸ் தோனி அடிக்க.. இதோட ஆட்டம் முடிச்சுருச்சுனு அம்பயர் ஆட்டைய முடிக்க… சென்னை ரசிகர்கள் மனசில் தோல்வியால் இடி இடிக்க.. ராஜஸ்தான் வின் பண்ணிட்டோம்னு சந்தோஷத்தில் கொடி பிடிக்க 16 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை முத்தம் இட்டது…
தொரத்தி தொரத்தி போட்ட பால் ஆஹ் தூக்கி தூக்கி அடிச்ச சஞ்சு சாம்சன் ஆட்ட ஹீரோ அவார்ட் வாங்குனாரு…
இன்னைக்கு மேட்ச் கொல்கத்தாக்கும் மும்பைக்கும் ஒரு மோதல் இருக்கு… நீங்க யாரும் வீட்ட விட்டு வெளிய போய் காதல் பண்ணாம.. பத்திரமா 7.30 க்கு உட்கார்ந்து மேட்ச் பாருங்க…
கொல்கத்தா சைடு தமிழ்நாட்டு பையன் தினேஷ் கார்த்திக் ஹெட் ல… ரசல்,மோர்கன்,நிதிஷ் ராணா , குல்தீப் யாதவ் னு ஒரு பட்டாளம் இருக்க..
மும்பைக்கு ரோஹித் தலைமைல இரண்டு பாண்டையாஸ்,பொல்லார்ட் ,சூரிய குமார் யாதவ்,பும்ரா,டி காக் இருகாங்க .. விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது விடாம பாருங்கோ.
