எப்போதுமே சி.எஸ்.கே. தான்… டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வரும் #Cskforever

சி.எஸ்.கே. ரசிகர்கள் டுவீட்டரில் #Cskforever என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
CSK

நேற்று நடந்த ஐ.பி.எல் தொடரின் 41-வது லீக் போட்டியில், சென்னை – மும்பை அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தனர். 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய குயின்டன் டி காக் மற்றும் இஷான் கிஷன் இருவரும் மிகவும் அருமையாக விளையாடினர். இதன் மூலம் மும்பை அணி விக்கெட் ஏதும் இழக்காமல், 12.2 ஓவரிலேயே 116 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இதனை தொடர்ந்து சென்னை அணி தோல்வியைடைந்து ப்ளே ஆஃப்-ல் இருந்து வெளியேறியது. இதுக்குறித்து பலதரப்பிலிருந்து விமரசனங்கள் எழுந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் டுவிட்டரில் #Cskforever ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Exit mobile version