பாப் டு பிளிசி அரைசதம் வீண்: 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி மாபெரும் வெற்றி

20 ஓவர் முடிவில் சென்னை அணி 200 ரன்கள் மட்டுமே எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ,தொடக்க வீரர்களாக முரளி விஜய், வாட்சனுடன் களம் இறங்கியது.உனட்கட் வீசிய 3 வது ஓவரில் அடுத்தடுத்து 2 பௌண்டரிகளை முரளி விஜய் அடித்து திரும்ப பார்ம்க்கு வந்தார்.4 வது ஓவரில் தான் வாட்சன் ஒரு சிக்ஸர் தூக்கி தனது பௌண்டரி எண்ணிக்கையை தொடங்கினார்.முரளி விஜய் அவ்வப்போது பொறுமையாய் பௌண்டரிகளை அடித்து ஆட,மறுமுனையில் டாம் கரண் பந்து வீச்சில் வாட்சன் 2 சிக்ஸர்,ஒரு பௌண்டரி அடிக்க , 6 ஓவர் முடிவுக்கு சென்னை அணி 53 ரன்களை எடுத்து இருந்தது.பெரிதும் நம்பிக்கை வைத்து இருந்த வாட்சன் 21 பந்து 33 ரன்களில் திவாடியா பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேற,அதே ஓவரில் முரளி விஜய்யும் 21 ரன்களுடன் நடையை கட்டினார்.அடுத்து எதிர்பாராத விதமாக பாப் டு பிளிசியுடன் ஷாம் கரண் இணைந்து முதல் பந்திலேயே பௌண்டரி அடிக்க , திவாடியா வீசிய அடுத்த ஒவரில் 2 சிக்ஸர்களை அடித்த ஷாம் 6 பந்தில் 17 எடுத்து வெளியேறினார்.

அதே ஓவரில் அறிமுக வீரர் ருதுராஜ் வந்த வேகத்தில் ரன் ஏதுமின்றி வெளியேற சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களுடன் தடுமாறியது.பாப் டு பிளிசியுடன் இணைந்த ஜாதவ், கோபால் பந்து வீச்சில் ஹாட்ரிக் பௌண்டரி அடிக்க 11.5 ஓவரில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது.உனட்கட் வீசிய 13.2 ஓவரில் ஜாதவ் 22 ரன்னில் வெளியேற..பெரிய எதிர்பார்ப்புடன் தல தோனி களம் இறங்கினார். திவாடியா வீசிய 15 வது ஓவரில் மிக நீண்ட நேரத்திற்கு பிறகு டு பிளிசி 2 சிக்ஸர் அடித்து ஓரளவு நம்பிக்கை அளிக்க…சென்னை அணிக்கு 30 பந்துகளில் 86 ரன்கள் தேவையாக இருந்தது.தொடர்ந்து அடித்து ஆடிய டு பிளிசி 17 வது ஓவரில் 3 சிக்ஸர்களை தெறிக்கவிட்டு 29 பந்துகளில் 50 ரன்களை கடந்தார்.

3 ஓவர்களில் 58 ரன் வேண்டும் என்ற நிலையில் தோனி தட்டி கொடுக்க டு பிளிசி ஒரு சிக்ஸர் அடித்து இரு அணி வீரர்களையும் நெஞ்சு படபடக்க செய்தார்.9 பந்துகளில் 44 ரன்கள் சென்னை அணிக்கு தேவையாக இருக்க.. டு பிளிசி மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்து அடுத்த பாலே அவுட் ஆகி வெளியேறினார்.4 பந்துகளில் 30 ரன்கள் தேவையாக இருக்க தல தோனி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார்.20 ஓவர் முடிவில் சென்னை அணி 200 ரன்கள் மட்டுமே எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற முக்கிய காரணமாய் இருந்த சஞ்சு சாம்சன் 32 பந்துகள் 74 ரன்கள்( 9 சிக்ஸர்,1 பௌண்டரி)ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Exit mobile version