ஜடேஜா,ராயுடு வேற லெவல் பேட்டிங் : டெல்லி அணி 180 ரன்கள் எடுத்து வெற்றி பெறுமா?

கடைசி நேரத்தில் ஜடேஜா,ராயுடுவின் அதிரடியால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக சென்னை அணி வழங்கியது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து சென்னை அணி சார்பில் தொடக்க வீரர்களாக சாம் கர்ர்ன் மற்றும் டு பிளிசி களம் இறங்கினர்.சாம் கர்ர்ன் துஷார் வீசிய முதல் ஓவரிலேயே ரன் எதுவும் அடிக்காமல் வெளியேற,டு பிளிசி உடன் இணைந்த வாட்சன் அவ்வப்பொழுது பௌண்டரிகளை அடித்து அசத்தினர்.தொடர்ந்து அடித்து ஆடிய டு பிளிசி அரைசதம் அடிக்க,மறுமுனையில் சிறப்பாக விளையாடிய வாட்சன்(36 ரன்கள்,28 பந்துகள்) நோர்கியா வீசிய 12 வது ஓவரில் கிளீன் போல்ட் ஆனார்.

14 வது ஓவர் வீசிய அஸ்வின் பந்தில் ராயுடு ஒரு சிக்ஸர் பறக்க விட,சென்னை 14 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் பெற்று இருந்தது.ரபடா அடுத்த ஓவர் போட்டு டு பிளிசியை(58 ரன்கள்,47 பந்துகள்) வெளியேற்ற,அடுத்து கேப்டன் தோனி களம் இறங்கினார்.டு பிளிசியின் விக்கெட் இழப்பிற்கு பிறகு சென்னை அணியின் ஸ்கோர் மெதுவாக நகர,17 வது ஓவர் வீசிய நோர்கியா பந்தில் ராயுடு ஒரு சிக்ஸர் பறக்கவிட,அதே ஓவரில் அடிக்க முற்பட்ட தோனி(3 ரன்கள்,5 பந்துகள்) விக்கெட் கீப்பர் கேரியிடம் கேட்ச் ஆனார்.

சென்னை அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்க,அடுத்த ஓவர் வீசிய துஷார் பந்தில் ஜடேஜா மைதானத்திற்கு வெளியே ஒரு சிக்ஸரை தெறிக்கவிட்டார்.ரபடா வீசிய 19 வது ஓவரில் ராயுடு,ஜடேஜா தலா ஒரு சிக்ஸர்களை அடித்து நொறுக்க,கடைசி ஓவரில் மீண்டும் ஜடேஜா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179ரன்கள் அடித்து டெல்லிக்கு 180 ரன்கள் இலக்காக வழங்கியது.

சென்னை அணி சார்பில் ராயுடு 45 ரன்களுடனும்,ஜடேஜா 33 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

Exit mobile version