ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வெற்றி:டெல்லி அணியை பேட் செய்ய அழைப்பு

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று
பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
dc vs rcb

13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபு தாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 19-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று
பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 4-வது வெற்றியை பெறப்போவது எந்த அணி என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும்.

Exit mobile version