தல தோனி போல் தரமா ஆட போறேன் ராஜஸ்தான் வீரர் சபதம்!!

உலகின் தலைசிறந்த பினிஷேர் ஆன எம்.எஸ். தோனி  அவர் போட்டியை  தரமாக முடிப்பது போன்று நானும்  அதேபோல் செய்ய விரும்புகிறேன் என டேவிட் மில்லர்  கூறியுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் இடது கை அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர். இவர்  சென்ற 8  வருடங்களாக கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணியில் இடம் பெற்று விளையாடி  உள்ளார். இந்த வருட சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக  தனது ஆட்டத்தை  தொடங்க இருக்கிறார்.

 தற்போது தோனி  தரமான  பினிஷேர்  ஆக செயல்படுவது போல் தானும் இருக்க  விரும்புவதாக டேவிட் மில்லர்  கூறியுள்ளார்.

டேவிட் மில்லர் இதுகுறித்து  தெரிவிக்கையில் ‘‘ தோனி அவரது  பணியை  எப்படி சிறப்பாக செய்து  முடிக்கிறாரோ அதே  வழியில் நானும் பயணிக்க  விரும்புகிறேன். அவர் அமைதியாக  இருந்தாலும், அவர் எப்போதும்  ஆட்டத்தை எப்போதும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்  என்று நினைக்க தோன்றும்.

அவர் கிரிக்கெட்டை  ஆடுகின்ற விதம், மிகவும்  தரமானது அதைப் போலவே நானும் விரும்பி  செயல்பட  இருக்கின்றேன்.  அவரைப் போன்றே  சிறந்த தரத்தை வெளிப்படுத்த முயற்சி எடுப்பேன்.  தோனி  தன்னுடைய  பலம் மற்றும் பலவீனத்தை  புரிந்து  கொண்டு அதற்கு ஏற்ப  திட்டங்களைச் செயல்படுத்துகிறார். நானும்  இதை செய்வேன் என நம்புகிறேன். அவரைப்போன்று பேட்டிங்  ஆட வேண்டும் இதையெல்லாம்விட,  சேசிங் சமயத்தில் அவரின் சில ஆட்டத்தை கண்டு  வியப்பில் ஆழ்ந்து இருக்கிறேன்.  எனவேதான்  இவரை போலவே  போட்டிகளை பினிஷிங்செய்ய வேண்டும்  என்றுதான் விரும்புகிறேன் என மில்லர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version