தோனிக்கு புகழாரம் சூட்டிய தமிழக அமைச்சர்…

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டன், இந்தியாவுக்கு அதிக கோப்பைகளை பெற்று தந்தவருமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார்.

அவரின் இந்த முடிவை அறிந்த ரசிகர்கள் பலர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தமிழ் நாட்டின் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சரான எஸ். பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய நட்சத்திர வீரர் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் அதில்

இந்திய தேசத்தின் பட்டித்தொட்டிகளில் எல்லாம் பல கிரிக்கெட் வீரர்கள் உருவாக உந்து சக்தியாக இருந்து, உலக கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் சரித்திர நாயகனாக திகழ்ந்தவர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், தமிழ் மண்ணை நேசித்து தமிழ் மக்களின் அபிமான வீரராகவும் திகழ்பவர்.

நம் தேசத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இமயமாய் உயர்ந்த @msdhoni உங்களின் அடுத்தடுத்த முயற்சிகளும் பெரும் வெற்றி பெற ஒரு கிரிக்கெட் ரசிகனாக மனதார வாழ்த்துகிறேன் என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version