சையத் முஸ்தாக் அலி டி-20 போட்டி : தமிழ்நாடு அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் சையத் முஸ்தாக் அலி டி-20 போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை:

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் சையத் முஸ்தாக் அலி டி-20 போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் ஆண்டுக்கான போட்டியானது வருகிற ஜனவரி 10 ம் தேதி தொடங்கி 31 ம் தேதி வரை நடைபெறுகிறது.

38 அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்தாக் அலி டி-20 கிரிக்கெட் போட்டியில் 6 பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டு, அதில் தமிழக அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் சென்னை,மும்பை,கொல்கத்தா உள்பட 6 இடங்களில் நடக்கிறது.

Read more – அதிமுக மீது சீமானுக்கு அப்படி என்ன கோபம் : அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

தமிழக அணி சார்பில் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கும், துணை கேப்டனாக விஜய் சங்கரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது.அதன்படி, சையத் முஷ்தாக் அலி கிரிக்கெட் தொடருக்கான தமிழக அணியின் விவரம்;

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்),என்.ஜெகதீசன், பாபா அபராஜித்,கே.பி.அருண் கார்த்திக், பாபா இந்திரஜித், எம்.ஷாருக்கான், ஆர்.எஸ்.ஜெகநாத் சீனிவாஸ், ஆர்.சோனு யாதவ், சி.ஹரி நிஷாந்த், சந்தீப் வாரியர், எம்.அஸ்வின், ஆர்.சாய்கிஷோர், எம்.சித்தார்த், பிரதோஷ் ரஞ்சன் பால், எம்.முகமது, அஸ்வின் கிறிஸ்ட், எல்.சூர்யபிரகாஷ், ஜெ.கௌசிக், ஜி.பெரியசாமி.

Exit mobile version