லங்கா பிரீமியர் லீக் போட்டியில் டூ பிளஸ்ஸி, ரஸல்

இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தும் லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டூ பிளஸ்ஸி, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆந்த்ரே ரஸல் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
Andre Russel Faf du Plessis

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை போன்று இலங்கையில் லங்கா பிரமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தப் போட்டியை அறிமுகம் செய்வதில் அங்கு காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அடுத்த மாதம் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை ஐந்து அணிகள் மோதும் வகையில் போட்டித் தொடர் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயிலை கண்டி டஸ்கடர்ஸ் அணியும், கார்லோஸ் பிராத்வைட்டை தம்புல்லா ஹாக்ஸ் அணியும், தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லரை தம்புல்லா அணியும், பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதியை காலே கிளாடியோட்டர்ஸ் அணியும், சோயிப் மாலிக்கை ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோல் டூ பிளஸ்ஸி, ஆந்த்ரே ரஸல் ஆகியோரை கொழும்பு கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. வெளிநாட்டு வீரர்கள் லங்கா பிரீமியர் லீக் போட்டியில் ஆடுவதால் அந்தப் போட்டி களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version