இந்திய கிரிக்கெட் வீரருக்கு நிச்சயதார்த்தம்! வாழ்த்து தெரிவித்த அணி வீரர்கள்!!

கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை அறிவித்து, தன் வருங்கால மனைவியான வைஷாலி விஸ்வேஸ்வரனின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

விஜய் சங்கர், கடந்த 2018-ஆம் ஆண்டு, இலங்கைக்கு எதிராக நடந்த டி20 போட்டியில், அறிமுகமானார். ஓராண்டுக்குப் பின்னர், மெல்பர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் விளையாடினார். 2019-ல் தமிழக ரஞ்சி அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை இந்தியாவுக்காக 12 ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் சங்கர். 2019-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை அணியிலும் சங்கர் இடம் பெற்றிருந்தார். இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐ.பி.எல் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாட உள்ளார். 

விஜய்-ன் நிச்சயதார்த்த அறிவிப்பைத்தொடர்ந்து, கே.எல். ராகுல், சஹால், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும், கருண் நாயர், அபினவ் முகுந்த், ஜெய்ந்த் யாதவ் உள்ளிட்ட வீரர்களும், தங்களது வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டனர். முன்னாள் கிரிக்கெட் வீரரான பத்ரிநாத்தும், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version